Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அம்மா சாபம் தான் விஜயகாந்த் இப்படி ஆனதற்கு காரணம்’ - அமைச்சர் அதிரடி

Webdunia
திங்கள், 25 ஜூலை 2016 (15:15 IST)
சட்டசபையில் தேமுதிகவிற்கு இறங்கு முகம் என்று அம்மா சொன்னார். அது பலித்தது. விஜயகாந்துக்கு டெபாசிட் போனதற்கு காரணம் அம்மாதான் என்று ஊரக தொழில்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.
 

 
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், அம்மாவட்டத்தின் ஏழு தொகுதிகளுக்கான அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஊரக தொழில்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள் கலந்துகொண்டார்.
 
அப்போது அவர் பேசுகையில், “சட்டசபையில் தேமுதிகவிற்கு இறங்கு முகம் என்று அம்மா சொன்னார். அது பலித்தது. விஜயகாந்துக்கு டெபாசிட் போனதற்கு காரணம் அம்மாதான். அப்போதே, திமுகவிற்கும் அம்மா சாபம் விட்டிருந்தால் திமுகவுக்கும் டெபாசிட் போயிருக்கும்.
 
விருதுநகர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் வெற்றிபெற்று விட்டோம், இனி நாங்கள்தான் என்று திமுகவினர் சொல்கிறார்கள். அதிமுக ஆளும் கட்சி என்பதை மறந்து விட்டு இப்படி பேசுகிறார்கள். திமுக எம்எல்ஏவால் ஒரு ரேசன் கார்டு வாங்கித் தர முடியுமா? முதியோர் பென்சன் வாங்கி கொடுக்க முடியுமா?” என்று கூறியுள்ளார்.
 
அப்படியென்றால், எதிர்கட்சி செய்ய நினைத்தாலும், ஆளுங்கட்சியினர் செய்யவிடமாட்டார்களா என்று கூட்டத்தின் இடையே சலசலப்பு எழுந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக தலைவர் விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு.. முக்கிய பேச்சுவார்த்தை..!

பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஜெயிலுக்கு போகும் முதல் திமுக அமைச்சர் இவர்தான்! - அண்ணாமலை எச்சரிக்கை!

டெல்லியில் அதிமுக கட்சி அலுவலகம்.. காணொளி மூலம் திறந்து வைத்த ஈபிஎஸ்.!

செல்லாத மசோதாவை ஜனாதிபதிக்கு ஆளுனர் அனுப்பியது ஏன்? உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி..!

80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற 24 வயது இளைஞர்: அமேதியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments