பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மரியாதை..!

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (16:39 IST)
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன

கடந்த சில மாதங்களாக விஜய் மக்கள் இயக்கத்தினர் அரசியலை நோக்கி தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.  ஏற்கனவே ஒரு சில அரசியல் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

குறிப்பாக காமராஜர், பெரியார் ஆகியவர்களின் பிறந்தநாள் அன்று அவர்களுடைய சிலைக்கு மாலை அணிவித்தனர். அதேபோல் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளின் போது  அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

இந்த நிலையில் இன்று முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தியை அடுத்து சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமே இல்லை.. எதிர்காலத்தில் ஏறுமா? இறங்குமா?

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு..!

நீதிபதி சுவாமிநாதன் பணியில் இருந்து நீக்க நோட்டீஸ்? இந்தியா கூட்டணி திட்டம்?

ஓபிஎஸ்ஐ அடுத்து திடீரென டிடிவி தினகரனை சந்தித்த அண்ணாமலை.. என்ன திட்டம்?

இன்று புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம்.. க்யூ ஆர் கோடு அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments