Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்.! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்.!!

Senthil Velan
சனி, 21 செப்டம்பர் 2024 (12:21 IST)
தி.மு.க.வுக்கு ஊதுகுழலாக இருந்தால் தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலைக்கு நடிகர் விஜய் வந்துவிட்டார் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.
 
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் விஜய் வெற்றிக்கழகம் என்று வைத்திருந்தாலும், தி.மு.க.வுக்கு ஊதுகுழலாக இருந்தால் தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலைக்கு அவர் வந்துவிட்டாரோ என்று தோன்றுகிறது என்றார்.  பெரியார் சிலைக்கு விஜய் மாலை போட போனார் என்பதையே காட்டுகிறது என்று தெரிவித்தார்.
 
மேலும் விஜய் கட்சியின் மாநாட்டுக்கு பல்வேறு நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும்,  நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு மாநாடு நடத்துவதாக இருந்தால் சினிமா தான் பண்ண வேண்டும் எனவும் அரசியல் பேச முடியாது எனவும் எச். ராஜா கூறினார்.  
 
காங்கிரஸ் போன்ற கட்சிகள் எல்லாம் தி.மு.க.வின் இலவச இணைப்புகள் தானே, அதுமாதிரி நடிகர் விஜய்யும் இலவச இணைப்பாய் இருப்பார் என நம்புகிறேன் என்று அவர் விமர்சித்தார்.
 
பெரியார் சிலைக்கு மாலை போட்டதால் அவரது மாநாட்டுக்கு அனுமதி கிடைத்திருக்கலாம் என தெரிவித்த அவர், திராவிடத்துக்கு எதிரான இருப்பிடத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என கூறினார்.


ALSO READ: அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.! பல்வேறு நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!!
 
நீட் தேவையில்லை எனக் கூறும் திமுகவினர், அவர்கள் வீட்டுக்கு மும்மொழி, தமிழ்நாட்டுக்கு இருமொழி என்பதை பின்பற்றுகின்றனர் என்றும் இது ஒரு மோசடித்தனம் என்றும் எச்.ராஜா குற்றம் சாட்டினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடித்து துவைக்கும் வெயில்.. இனி மதியம் வரை மட்டுமே வேலை! - ஒடிசா அரசு அறிவிப்பு!

1 லட்ச ரூபாய் பில்லா? நீங்க கரண்ட் பில் கட்டாம இருந்துட்டு..!? - கங்கனாவை வறுத்தெடுத்த மின்வாரியம்!

அடுத்த பாஜக தமிழக தலைவர் யார்? கூட்டணி யாருடன்? விடிய விடிய ஆலோசனை செய்த அமித்ஷா..!

ஹால் டிக்கெட்டை கவ்வி சென்ற பருந்து.. அரசு வேலை தேர்வு எழுத வந்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி..!

அரசு வேலை, ரூ.4 கோடி ரொக்கம், சொந்த வீடு.. வினேஷ் போகத் தேர்வு செய்தது எதை?

அடுத்த கட்டுரையில்
Show comments