Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர்கள் போராட்டம் எதிரொலி: களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்

Webdunia
புதன், 23 ஜனவரி 2019 (21:12 IST)
ஜாக்டோ ஜியோ அமைப்பில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்து வருவதால் பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இன்று மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். ஒருசில பள்ளிகள் திறக்காமல் பூட்டப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது.

இந்த நிலையில் திருப்பூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு விஜய் ரசிகர்கள் தங்கள் செலவில் இரண்டு தற்காலிக ஆசிரியர்களை நியமித்துள்ளனர். இந்த இருவரும் அங்குள்ள மாணவ, மாணவிகளுக்கு பாடம் சொல்லி தருவதால் வேலைநிறுத்தத்தின் பாதிப்பு அந்த பள்ளியில் தெரியவில்லை.

போராட்டம் நீடித்தால் இன்னும் ஒருசில பள்ளிகளிலும் ஆசிரியர்களை தற்காலிகமாக நியமனம் செய்ய விஜய் ரசிகர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் ரசிகர்களின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதே நேரத்தில் போராட்டக்காரர்கள் விஜய் ரசிகர்கள் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்.. ஜாமீன் பெற்று மீண்டும் அதே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை..!

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்......??? விஜய்க்கு கேள்வி எழுப்பிய தமிழிசை

அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து பேசக்கூடாது: ரங்கராஜன் நரசிம்மனுக்கு, நிபந்தனை ஜாமீன்..!

பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து: சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

5 மாநில ஆளுநர்கள் மாற்றம்: ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments