Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக பக்கம் விஜய்: தேர்தல் பணியாற்ற ரசிகர்களுக்கு உத்தரவு?

Webdunia
வெள்ளி, 6 மே 2016 (16:29 IST)
தேர்தல் வரும்போது எல்லாம் ரஜினி மற்றும் விஜயின் தீவிர ரசிகர்கள் தங்கள் தலைவர் எந்த அரசியல் கட்சிக்கு ஆதர்வு என்ற முடிவுக்காக எதிர்பார்ப்போடு காத்திருப்பர்கள்.


 
 
இந்த முறை நடிகர் விஜய் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட உத்தரவிட்டுள்ளாராம். தனது உத்தரவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் வாய் மொழி உத்தரவாக தமிழ்நாடு முழுவதும் உள்ள தனது ரசிகர் மன்றங்களுக்கு கூறியுள்ளாராம்.
 
தமிழ் சினிமா உலகை திமுக தரப்பு ஆதிக்கம் செலுத்தி வந்ததால், கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தனர் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். ஆனால் கடந்த 5 வருடத்தில் புலி, தலைவா, துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட விஜயின் பல படங்களுக்கு பிரச்சனைகள் வந்தன.
 
புலி திரைப்படம் வருவதற்கு முன்னர் விஜயின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதில் ஆளும் கட்சியின் பங்கு இருப்பதாக விஜய் ரசிகர்கள் பேசிவந்தனர்.
 
இந்நிலையில் பலமுனை போட்டியில் இருக்கும் தமிழக தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற விஜய் கூறியதாக மாநில தலைவர் ஆனந்திடம் இருந்து தகவல்கள் வந்ததாக ரசிகர்கள் கூறுகின்றனர். இதே தகவல் தமிழகம் முழுவதும் உள்ள அதிகாரப்பூர்வ விஜய் ரசிகர் மன்றங்களுக்கும் வந்ததாக, மாவட்ட அளவில் செயல்படும் வேலூர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் கூறினார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் அதிகம்: ஆய்வுக்கு பின் குஷ்பு பேட்டி..!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்..! சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றம்..!!

துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்திக்கு தமிழக அரசின் முக்கிய பதவி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments