Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அத்துமீறிய கள்ளக்காதல்; கண்டித்த ஹவுஸ் ஓனரை கொன்ற விஜய் ரசிகர் மன்ற திர்வாகி!

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (09:25 IST)
நாகப்பட்டிணம் அடுத்த சீர்காழியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வீட்டு உரிமையாளரை விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழியில் உள்ள தென்பாதி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சித்ரா. இவர் அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டு மாடியில் பிருந்தா என்ற பெண் தன் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். பிருந்தாவின் கணவர் வெளிநாட்டில் உள்ளார்.

இந்நிலையில் கடந்த 18ம் தேதி வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த சித்ராவை பைக்கில் வந்த ஆசாமி இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது மேல் மாடியில் குடியிருக்கும் பிருந்தா வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதை சித்ரா கண்டித்ததால் இருவரிடையே வாக்குவாதம் எழுந்ததாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக பிருந்தாவுடன் தொடர்பில் இருந்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி சையது ரியாசுதீனை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்தபோது சித்ராவை கொன்றதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

பிருந்தாவிற்கு திருமணம் ஆகும் முன்னரே ரியாசுதினுக்கு அவருடன் பழக்கம் இருந்து பிறகு காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் பிருந்தாவை வேறு ஒருவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் பிருந்தாவின் கணவர் வெளிநாடு சென்று விட்டதால் அடிக்கடி பிருந்தாவை தனிமையில் சந்தித்து வந்துள்ளார் ரியாசுதீன். இதையறிந்த வீட்டின் உரிமையாளர் சித்ரா அவர்களை கண்டிக்கவே இடையூறாக இருந்த அவரை கொல்ல இருவரும் திட்டமிட்டு இந்த கொலையை செய்ததாக ரியாசுதீன் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.’

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து: சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

5 மாநில ஆளுநர்கள் மாற்றம்: ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவு..!

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

அடுத்த கட்டுரையில்
Show comments