Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூர் தொகுதியில் பிரசாரம் ! வருங்காலத்தில் செய்யப்போவதை வாக்குறுதியாக அளிக்கிறோம் - ஸ்டாலின்

Webdunia
சனி, 3 ஆகஸ்ட் 2019 (16:50 IST)
வேலூர் தொகுதி லோக்சபா தேர்தல் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனால் அதிமுக - திமுக ஆகிய இரு கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி. சண்முகம், திமுக சார்பில்  கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றனர்.
 
இந்நிலையில் இன்று வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சத்திவாச்சாரி தெருவில் இன்று திமுக தலைவர்  ஸ்டாலின் திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியது :
 
வேலூர் தொகுதிய்ல் 2 கட்டமாக 6 நாட்களாக பிரசாரம் செய்து வருகிறோம். மக்களும், பெண்களும் எங்களுக்கு அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர்.இது எங்களின் வெற்றிக்கு சான்றாக அமைந்துள்ளது.கடந்த ஏப்ரல் மாதமே தேர்தல் முடிந்திருக்க வேண்டும் ஆனால் மத்திய பாஜக, அதிமுக அரசு சூழ்ச்சி செய்து ரெய்டு என்ற பெயரில் தேர்தலை நிறுத்தினார்கள்.
 
இன்று ஆங்கிய நாளிதழில் ஒருசெய்தி வெளியாகியுள்ளது. அதில் மத்திய அரசு ஒதுக்கும் நிதியை மாநில அரசு சரியாக பயன்படுத்துகிறதா என்ற புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
 
மத்திய அரசு, பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் சமுதாய மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதற்காக  தமிழகத்திற்கு 2 ஆயிரத்து 394 கோடி ரூபாய்  நிதி ஒதுக்கியுள்ளது.
 
ஆனால் அந்த நிதியைச்  செயல்படுத்தாமல் அப்படியே திருப்பி அனுப்பி விட்டனர். மத்திய அரசு 247 கோடியே 84 லட்சம் நிதியை 100 நாள் வேலைத் திட்டத்திற்கு என ஒதுக்கியது. இதையும் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.
 
மேலும், 100 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி கிராமப்புற மக்கள் வேலைவாய்ப்பிற்காக கொடுத்துள்ளனர். இந்த நிதியிலும் ரூ.97 கோடியை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளனர். அத்துடன் ரூ.23 கோடியே 54  லட்சம் நிதியை மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சுழல் நிதி கடன் உள்ளிட்டவை வழங்க ஒதுக்கப்பட்டது. அதையும் வழங்காமல்  மொத்தம் ரூ.3 ஆயிரத்து 677 கோடி திருப்பி அனுப்பியுள்ளனர்.
 
நம் தமிழகத்தில் கையாலாகாத எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடந்து கொண்டு இருப்பதற்கு இதுவே சாட்சி. தேர்தல் பிரசாரத்தில் நான் ஒரு விவசாயி என எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். ஆனால் எட்டுவழிச்சாலை வேண்டல் என மக்கள் போராட்டம் நடத்தினர். அங்கு விவிவசாயம் பாதிக்காமல் இருக்க சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. ஆனால் இந்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி அரசு சென்றுள்ளனர்.
 
திமுகவிடம் ஆட்சி இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களோடு இருப்பவர்கள் நாங்கள்தான். நாங்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை தேடிவரவில்லை. அதனால் திமுக சின்னமாகிய உதய சூரியனுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments