சென்னையில் விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் சரமாரியாக வெட்டிக் கொலை
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் சரமாரியாக வெட்டிக் கொலை
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் நிலத்தரகர் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் பி.டி.சி குடியிருப்பு பகுதியில் உள்ள அவரின் அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு மூன்று பைக்குகளில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் பரமசிவத்தை வெட்டிக் கொலை செய்துவிட்டு, மின்னல் வேகத்தில் மறைந்தனர். இதில் பரசிவம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.