Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வர்தா புயல் கரையை கடக்க தொடங்கியது: பயங்கரமாக வீசும் புயல் காற்று!

வர்தா புயல் கரையை கடக்க தொடங்கியது: பயங்கரமாக வீசும் புயல் காற்று!

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2016 (12:33 IST)
சென்னையை மிரட்டிக்கொண்டிருக்கும் வர்தா புயல் சென்னை அருகே கரையை கடக்க தொடங்கிவிட்டதாக செயற்கைகோள் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சென்னையில் பலத்த வேகத்துடன் புயல் காற்று வீசி வருகிறது.


 
 
கரையை கடந்து கொண்டிருக்கும் இந்த வர்தா புயல் முழுவதுமாக கரையை கடக்க சில மணி நேரங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் அடுத்த 2 மணி நேரத்திற்கு பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
 
சென்னை நகர் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. புயல் கரையை கடந்து கொண்டிருப்பதால் காற்றின் வேகம் குறைந்து பின்னர் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்து வாகனங்கள் மீது விழுந்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments