திமுக தலைவர் மு.கருணாநிதி உடல்நகல் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மருத்துவமனைக்கு சென்றபோது தி.மு.க.வினர் அவரை உள்ளே விடாமல் விரட்டியடித்தனர்.
திமுக தலைவர் மு.கருணாநிதி உடல்நகல் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க பல்வேறு அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து சென்றனர். நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, உடல்நிலை குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு சென்றார்.
அப்போது திமுக தொண்டர்கள் வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை உள்ளே விடாமல் தடுத்தனர். இதனால் வைகோ திரும்பி சென்றுவிட்டார். தி.மு.க.வினர் வைகோவின் கார் மீது பொருட்களை வீசியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து திமுக பொருளாலர் ஸ்டாலின் கூறியதாவது:-
நலம் விசாரிக்க வந்த மிதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியதை நான் கண்டிக்கிறேன். மருத்துவமனையில் நான் இல்லாத நேரத்தில் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.
கழகத்திற்கு எதிரான பிரச்சாரங்களை அரசியல் ரீதியாக ஜனநாயக முறையில் எதிர்கொள்ளும் சக்தி மிக்க தொண்டர்கள் நிறைந்த இந்த இயக்கத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை கழக தோழர்கள் தவிர்த்து அமைதி காக்குமாறு கண்டிப்புடன் கேட்டு கொள்கிறேன், என்று கூறினார்.