Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலை சிறுத்தை எங்கள் கூட்டணியில்தான் நீடிக்கிறது : வைகோ

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2015 (21:51 IST)
மக்கள் நலக் கூட்டணியிலிருந்து விடுதலை சிறுத்தைகள் வெளியேறவில்லை என்று வைகோ கூறியுள்ளார்.


 

 
வைகோ ஏற்படுத்திய கூட்டணியிலிருந்து விடுதலை சிறுத்தை வெளியேறும் சூழல் நிலவியதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால் இதை வைகோ மறுத்துள்ளார்.
 
மக்கள் நலக்கூட்டணி தனது அடிகளை தெளிவாகவும், உறுதியாகவும் எடுத்து வைத்து வருகிறது. எங்களுக்குள் எந்தவித பூசலோ, சச்சரவுகளோ எழவில்லை என்று கூறினார்.
 
மேலும், தமிழகத்தில் ஊழல் மலிந்துள்ளது. எனவே மக்கள் பிரச்னைக்காக களம் இறங்கியுள்ள எங்கள் கூட்டணிக்கு எதிரான செய்திகளை வெளியிடாமல் ஊடகங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் எக்காரணத்தைக் கொண்டும் நாங்கள் அதிமுக அல்லது திமுகவுடன்  சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைக்க மாட்டோம் என்றும் வைகோ தெரிவித்தார்.

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

Show comments