Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதிக்பாட்ஷா கொலை செய்யப்பட்டது உண்மைதான் : வைகோ அதிரடி

Webdunia
புதன், 18 மே 2016 (13:40 IST)
2ஜி வழக்கில் தொடர்புடைய, திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்ஷா கொலை செய்யப்பட்டது உண்மைதான் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.


 

 
2ஜி ஊழல் தொடர்பாக, 2011ஆம் ஆண்டு, சாதிக்பாட்ஷாவிடம்  சிபிஐ விசாரணை செய்து வந்தது. அந்நிலையில், அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு கொடுத்த நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று அப்போது கூறப்பட்டது.
 
இந்நிலையில் அரியலூர் மாவட்டம், அய்யூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் நேற்று திடீரெனெ திருச்சியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
 
அதில், ஆ.ராசாவின் மைத்துனர் பரமேஷ்குமார், மற்றும் முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர்சேட் ஆகியோர் சேர்ந்து  சாதிக்பாட்ஷாவை கொலை செய்தாகக் கூறியுள்ளார். தற்போது தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், ரகசியத்தை வெளியிட்டதாகவும் கூறியுள்ளார்.
 
இதுபற்றி கருத்து கூறிய வைகோ “2ஜி ஸ்பெக்டரம் ஊழலில் சாதிக்பாஷாவிடமிருந்து எராளமான பணம் மு.க.ஸ்டாலினுக்கு கை மாறியுள்ளது. இதுபற்றி சாதிக்பாட்ஷா சிபிஐ-யிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
 
நீரா ராடியா-கனிமொழி தொலைபேசி உரையாடலில் சாதிக் பாட்ஷாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நிலையில்தான் அவர் கொலை செய்யப்பட்டார். 
 
2011ஆம் ஆண்டே திருச்சியை சேர்ந்த பிரபாகரன், அரியலூரில் என்னை சந்தித்து இதுபற்றி கூறினார். அவர் கூறியது அனைத்தும் உண்மைதான். கொலையை தற்கொலை என்று நாடகம் ஆடுகிறார்கள். இதில் காவல்துறை உயர் அதிகாரி ஜாபர்சேட்டிற்கு இதில் கண்டிப்பாக தொடர்புள்ளது. எனவே இதுபற்றி சிபிஐ விசாரணை செய்தால் மட்டுமே உண்மை வெளியே வரும்” என்று வைகோ கூறினார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் உள்ள மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்.. 5 பேர் பரிதாப பலி.!

அரசுப் பள்ளிகளில் 2025- 26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தயாராகும் பெற்றோர்..!

16 மாநிலங்களில் 10 கோடி ஆன்லைன் மோசடி.. டாக்டர் உள்பட 2 பேர் கைது..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments