Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரபிரதேசத்தில் பாஜகவின் ஆட்சி? - அதிக இடங்கள் பெற்று முன்னிலை

Webdunia
சனி, 11 மார்ச் 2017 (10:00 IST)
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில், உத்தரபிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால், அந்த மாநிலங்களில் பாஜகவே ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
 
இதில், மிக அதிகமான வாக்களார்கள் கொண்ட தொகுதி என்பதால் உத்தரபிரதேசம் முக்கியமான தொகுதியாக பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிந்து வெளியான கருத்து கணிப்புகளில், பாஜக அங்கு ஆட்சியை பிடிக்கும் எனக் கூறப்பட்டது. ஏனெனில், பணமதிப்பீடு தொடர்பாக, ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு இந்த மாநிலத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்றும் அகிலேஷ் யாதவ் பதவியிழப்பார் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து உத்தரபிரதேசத்தில் பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 275 இடங்களுக்கும் மேல் பாஜக முன்னிலையில் இருக்கிறது. எனவே, அங்கு பாஜக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கூட்டணி 80 இடங்களும், பகுஜன் சமாஜ்வாடி 27 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 
 
பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருவதால், அந்த மாநிலத்தில் உள்ள பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள்.
 
அதேபோல், உத்தரகாண்ட் மாநிலத்தில், மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 56 இடங்களில் பாஜக முன்னிலையில் இருப்பதால் அங்கும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments