Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேப்பாக்கம் தொகுதியில் தடுப்பூசி முகாம்: பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த உதயநிதி!

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (20:45 IST)
சேப்பாக்கம் தொகுதியில் தடுப்பூசி முகாம்களில் மிகவும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வரும் பொதுமக்களுக்கு உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து டுவிட்டுக்களை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
கொரோனா தொற்றை ஒழிக்கும் நடவடிக்கையாக சேப்பாக்கம், 63 அ வட்டம், பூபேகம் 2-வது தெரு பகுதியில் இன்றும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்று தொகுதி மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். நன்றி.
 
சேப்பாக்கம், 114அ வட்டம், அருணாச்சலம் தெரு பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். தொற்றை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு  அவசியமென அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. 
 
கொரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்க தடுப்பூசியே ஆயுதம் என உணர்ந்து திருவல்லிக்கேணி தொகுதி, 119 அ வட்டம், சைவ முத்தையா தெரு பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் இன்று அதிகளவில் வருகை தந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மராத்தி பேச தெரியாத வங்கி ஊழியர்கள் கன்னத்தில் அறை.. மகாராஷ்டிராவில் பரபரப்பு..!

டிகிரி போதும்.. 1299 காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்கள்! - சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே வக்ப் மசோதா: பிரதமர் மோடி கருத்து

டிரம்ப் வரிவிதிப்பு எதிரொலி.. இந்திய பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு..!

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் வக்பு திருத்த மசோதா ரத்து செய்யப்படும்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments