Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதி ஸ்டாலின் திமுகவை பீஸ் பீசாக்கி மூட்டை கட்டி கடலில் வீச பார்க்கிறார்! -பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (11:55 IST)
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  செய்தியாளர்களை சந்தித்தார்.


 
அப்போது பேசிய அவர்,

தமிழக திமுக அரசியல் எப்படியாவது சண்டை போட வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற திட்டத்தில்  ஓட்டைகள் போட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

சென்னை வெள்ளம் மற்றும் தென் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம் ஆகியவற்றை மிக மோசமாக கையாளப்பட்டது என அனைவருமே பேச ஆரம்பித்துள்ளனர். மழையால் தூத்துக்குடி மாவட்டம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது மத்திய அரசு முதன் முதலாக மழை வெள்ளத்திலிருந்து ஒரு மாவட்டம் வெளியே வருவதற்கு முன்பாகவே மத்திய அரசின் குழு 20 ஆம் தேதி வந்து ஆய்வு செய்ய வந்துவிட்டது. அதன் பின் தான் தமிழக முதல்வர் 21 ஆம் தேதி வருகிறார்.

இந்த ஒரு விஷயமே எந்த அளவிற்கு அக்கறையின்மை அலட்சியத்தன்மை எதையும் பொருட்படுத்தாமல் ஒரு முதலமைச்சர் திமுக ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்ல முடியாது

மேலும் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை நிவாரண பணிகளில் கவனம் செலுத்தாமல், மத்திய அரசை வம்புக்கு இருப்பதையே முழு கவனமாக வைத்துள்ளார்கள்

சுதந்திரத்திற்கு பிறகு எந்த பேரிடருக்கும் தேசிய பேரிடர் என கொடுக்கவில்லை தமிழக சுனாமிக்கோ ஒரிசாவில் வந்த கோரமான புயலுக்கோ புஜ்ஜி பூகம்பம் ஆகியவற்றிற்கோ தேசிய பேரிடர் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை தேசிய பேரிடர் என பெயரை பயன்படுத்த சட்டம், விதி கிடையாது. அதற்கான முகாந்திரம் இல்லை. ஆனால் பேரிடரில் தேவைப்படும் உதவியை மத்திய அரசு தயாராக உள்ளது.

தான் மத்திய அமைச்சர் எம் முருகன் சொல்லிட்டார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து சேதாரங்கள் தொடர்பாக புகைப்பட ஆதாரத்துடன் கொடுத்துள்ளோம்

மத்திய அரசு தமிழகத்திற்கு என்ன உதவி செய்ய வேண்டுமோ அது மிக மிக விரைவில் வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை என்று நிதி அமைச்சர் தூத்துக்குடி சென்று முழுமையாக பார்த்து நேரடியாக ஆய்வு செய்ய உள்ளார்

தமிழக அரசு எந்த வேலையும் செய்யவில்லை தமிழக அரசின் ஆலையை பாதிப்பு அதிகமாக இருக்கிறது அவர்கள் தற்போது வரை எந்த அக்கறையும் காட்டவில்லை முழு பொறுப்பையும் மத்திய அரசு எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது தமிழக அரசு சரியாக பணிகள் மேற்கொள்ளவில்லை , அதனால் பொறுப்பு மத்திய அரசிடம் உள்ளது. திமுகவிற்கு பொய் சொல்வது கைவந்த கலை.


 
2021 ல் குஜராத்தில் டகூட்டா புயல் தாக்கத்தில் 9836 கோடி கேட்ட நிலையில், உடனடியாக 1000 கோடி கொடுக்கப்பட்டது. மீதம் 8836 கோடி கொடுக்கவில்லை.

2020-21 கொரோனா காலத்தில் குஜராத்திற்கு மொத்தமாக 304 கோடி கொடுக்கப்பட்டது; தமிழகத்திற்கு 860 கோடி கொடுக்கப்பட்டுள்ளது

மத்திய குழு சேதத்தை கணக்கிட்டு அதற்கு தகுந்தார் போன்று நிதி வழங்குவார்கள் தமிழகத்தில் தென் தமிழகத்திற்கு மாநில அரசு பாதிப்பு கணக்கீடு எடுக்க வில்லை அது வேகமாக வரும் என நம்புகிறோம்

திமுகவின் அடுத்த பொய் வானிலை மையத்தின் மீது பொய் நம்முடைய கையால் ஆகாத தனத்தை மறைக்க சம்மதம் இல்லாத ஒருவர் மீது பழியை போடுவது. ஐ எம் டி இ பொருத்தவரை திமுக ஆசைப்படுவது போன்று கருப்பு சிவப்பு கொடியை வானிலை எச்சரிக்கைக்கு கொடுக்க முடியாது

மஞ்சள் மற்றும் சிவப்பு மற்றும் கொடுக்க வேண்டும் மஞ்சள் எச்சரிக்கை 12ஆம் தேதி கொடுத்தாகிவிட்டது அந்த நேரத்தில் திமுக சேலத்தில் இளைஞரணி மாநாடு, இந்தியா கூட்டணியில் பங்கேற்பு ஆகிய பணிகளில் தான் கவனம் செலுத்தியது.

இவர்களது கவனம் முழுவதும் முன்னேற்றக் நடவடிக்கையில் இல்லை கவனம் முழுவதும் சென்னை கார் ரேஸ் சேலம் திமுக மாநாடு இந்தி கூட்டணி ஆகியவற்றில் மட்டுமே இருந்தது

மஞ்சள் எச்சரிக்கை கொடுத்தாலே சிகப்பு எச்சரிக்கையாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், அவர்கள் கவனம் செலுத்தவில்லை. கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை

ஆனால் முன் கூட்டியே சொல்லவில்லை என  அபத்தமான விவாதத்தை இந்திய அரசியலில் யாருமே இதுவரை பார்த்ததில்லை எந்த அளவிற்கு தமிழகத்தில் திமுக பொறுத்தவரை புயலே வளர்ந்த கட்சி என்பதற்கு இது ஒரு உதாரணமாக இருக்கிறது

மழை வந்த பிறகு கூட திருநெல்வேலியின் மேயர் சேலத்தில் இருந்தார் அந்த அளவிற்கு மோசமான ஆட்சி தமிழகத்தில் உள்ளது இவர்களால் மக்களுக்கு நன்மை கிடைக்கவில்லை என்பதை தாண்டி இவர்களால் மக்களுக்கு வரக்கூடிய எந்த பிரச்சனைகளில் இருந்து மக்களை காப்பாற்ற முடியாது என்ற நிலை உள்ளது

நான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் சொல்லிக் கொண்டிருக்கிறேன் நம்மை மற்ற மாநில மாநிலங்கள் நம்மை ஓவரத்தை செய்வார்கள் என்று கடந்த 40 50 ஆண்டுகளாக இரண்டாவது பொருளாதார மாநிலமாக இருந்தோம் தற்போது உத்தரப்பிரதேசம் 2வது பொருளாதார மாநிலமாக மாறியுள்ளது

தயாநிதி மாறன் மேடையில் கழிவறையை கழுவுவார்கள் பான்பராக் போடுவார்கள் பானிபூரி நிற்பார்கள் என்று சொல்லி வந்தனர் ஆனால் இன்று உத்தரப்பிரதேசம் தமிழகத்தை ஓட்டை செய்து இரண்டாவது இடத்திற்கு வந்து தமிழகம் மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது இதே நிலைக்கு சென்றால் திமுக கையில் தமிழகம் இருந்தால் இன்னும் இரண்டு மாநிலங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தை ஓவர் டேக் செய்யும்

தமிழகத்திற்கு தேவை தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் பாஜக தான் தமிழகத்தில் மொத்தமாக முடித்துக் கட்டுவதன் வேலையை திமுகவினர் ஆரம்பித்துவிட்டனர் மக்கள் பணத்தை திருடுகின்றனர் வரக்கூடிய முதலீடுகளுக்கு கமிஷன் கேட்கிறார்கள் எனவே எந்த நிறுவனங்களும் வருவதற்கு தயாராக இல்லை.

அம்பத்தூர் தொழிற்பேட்டை திமுக ஆட்சியினரின் மோசமான கையாளுதலால் வெள்ளத்தால் சிக்கி மூன்று மாதங்களுக்கு பொருளாதாரம் இல்லை. திமுக இருக்க தமிழகத்தின் பொருளாதாரம் கீழே சென்று கொண்டிருக்கிறது

வருவாய் பெருக்குவதற்காக இந்த ஆட்சி இல்லை வருவாய் இழப்பிற்காக இந்த ஆட்சி இருக்கிறது. மத்திய அரசு 900 கோடி கொடுத்து மாநில அரசு 300 கோடி ரூபாய் சில 1200 கோடி ரூபாய் 800 கோடி ரூபாய் தற்போதும் இருப்பு இருக்கிறது அதை முதலில் செலவு செய்யுங்கள் தற்போது கையில் உள்ள பணத்தையே செலவு செய்யவில்லை

மக்களுக்கு செய்ய வேண்டிய வேலைகளை செய்யாமல் திசை திருப்பும் வேலைகளை மட்டுமே செய்கிறது. உதயநிதியை பொருத்தவரை ஒரு பேட்டன் வைத்துள்ளார் சனாதனத்தை பற்றி நான் தவறாக பேசவில்லை என்றால் அதன் விளைவு இந்தி கூட்டணி என்ற கூட்டணி மொத்தமாக இந்தியா முன்பு தலை துணிந்து கைகட்டி நின்று கொண்டிருக்கிறது

நிதீஷ் குமார் எப்படியாவது இந்தி கூட்டணியிலிருந்து இவர்களை வெளியேற்ற முற்படுகிறார் ஆனால் எவ்வளவு அவமானப்படுத்தினாலும் வெளியேற மாட்டோம் என்று இவர்கள் அங்கே இருக்கிறார்கள்

அப்பன் என்ற வார்த்தையை மாற்றப் போவதில்லை என்ற உதயநிதி கூறுகிறார் இதன் விளைவை அடுத்த மூன்று மாதம் கழித்து இதன் விளைவை பார்ப்பீர்கள் இதன் விளைவு 2024 பாராளுமன்ற தேர்தலில்( பிரண்ட்ஸ் படத்தில் நடிகர் வடிவேலுவின் கடிகார உடைப்பு காமெடி ஒப்பிட்டு உதயநிதியை கிண்டல் அடித்தார்)


 
உதயநிதி ஸ்டாலின் திமுகவை சுக்கு நூறாக பீஸ் பீசாக்கி மூட்டை கட்டி கடலில் வீச பார்க்கிறார். உதயநிதி தொடர்ந்து சொல்லட்டும் அவர் சொல்வது தமிழக மக்களுக்கு நல்லது திமுக இன்னும் தீய சக்தியை அப்புறப்படுத்துவதற்கு நமக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

மத்திய அரசின் நிலைப்பாட்டை பொருத்தவரை பெண்கள், ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் என 4 சாதிகள் தான் இந்தியாவில் உள்ளது. நான்கு சாதிகளுக்காக தான் வேலை பார்க்கிறோம்.

நான்கு சாதிகளுக்காக தான் எல்லா திட்டங்களும் வருகிறது. ஏழை என்ற சாதி இருக்காகூடாது என எண்ணுகிறோம்

தமிழகத்தில் இதற்கு முன்பு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு கமிஷன் போட்டார்கள் அந்த அறிக்கை எங்கு போனது காங்கிரஸ் இருக்கும்பொழுது சென்சஸ் எடுத்தார்கள் அதை வெளியிடவில்லை இன்று பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகு அனைவரும் கத்தி எடுத்து ஒருவருக்கொருவர் குத்துவதற்கு தயாராகி விட்டனர் இதனை தமிழகத்தில் பார்க்க விரும்புகிறீர்களா சும்மா இருக்கும் ஜாதிகளை தூண்டி விட்டு ஜாதி கலவரத்தை தூண்டுகிறீர்களா

கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு சித்திராமையா எடுத்த பிறகு கணக்கெடுப்பை காணவில்லை என்று கூறிவிட்டனர் சாதிவாரி கணக்கெடுப்பு அரசியலுக்காக பேசலாம். மூன்று மாநில தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் பற்றி சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசவில்லை எஸ்கேப் ஆகிவிட்டனர்

கோவையில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி மகன் பைந்தமிழ் பாரி வீட்டில் கர்நாடக அரசின் சோதனை தொடர்பான கேள்விக்கு - நண்பர்கள் இடையேயான சண்டை. குத்து சண்டையில் தெரியாமல் குத்துவது போல் தான் நாங்கள் பார்க்கிறோம். இது அடுத்த கட்டத்திற்கு போவதாக நாங்கள் பார்க்கவில்லை. வந்ததற்காக இரண்டு பெட்டிகளை கொண்டு சென்று உள்ளார்கள் இது கடைசி வரை போய் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நான் நம்பவில்லை

கர்நாடகாவில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி , அதில் எப்படி பாஜக வால் தான் சோதனை என்று சொல்ல முடியும். அப்படி சொல்வதானால் தான் திமுகவிற்கு மூளை கிடையாது என்று சொல்கிறோம்

நீதிபதியின் மீது சந்தேகம் இருப்பதாக திருமாவளவன் சொல்கிறார்.கம்யூனிஸ்ட் கட்சியினர் நீதி வெல்லவில்லை என்று கூறுகிறார்கள். நீங்கள் கம்யூனிஸ்ட் என்கிற பெயரை மாற்றி விடுங்கள் நீதிக்காக நீ போன் ஏழைகளுக்காக நிற்போம் என்று சொல்லும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று திமுகவிற்கு ஜெயின் ஜக் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்

சிறுகுரு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு தொடர்பாக முதல்வரை சந்திக்க மாட்டோம். 1-2 முறை கேட்டும் அனுமதி கொடுக்காததால், கம்யூனிஸ்ட் போல அழையா விருந்தாளியாக  நாங்கள் போக மாட்டோம். எங்களை முதலமைச்சர் மதிக்காவிட்டால் நாங்கள் முதலமைச்சரை மதிக்க மாட்டோம். நாங்கள் கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தைகளோ கிடையாது .மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்க போராட்டம் நடத்துவோம்.

சாவியை தொலைத்த இடத்தில் தேட வேண்டும். மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் எதற்கு? என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments