Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’முதல்வரை பாக்கணும் விடுங்க’, தடுத்த காவலர்கள்! – பெண்கள் விபரீத முடிவு!

Webdunia
புதன், 16 டிசம்பர் 2020 (09:30 IST)
சென்னையில் முதலமைச்சரை பார்க்க அனுமதிக்காததால் பெண்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணம்மாள், ஜெய மீனாம்பிகை என்ற இரு பெண்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க முதல்வர் இல்லத்துக்கு சென்றுள்ளனர். ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் காவலர்கள், பெண்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பிறகு முதல்வர் வீட்டுக்கு அருகே உள்ள முண்டகன்னி அம்மன் கோவிலுக்கு சென்ற பெண்கள் அங்கு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள் அந்த பெண்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர்கள் நலமுடன் இருப்பதாக கூறியுள்ள போலீஸார் அவர்கள் முதல்வரை எதற்காக சந்திக்க முயற்சித்தனர் என்பது குறித்தும் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்
Show comments