Webdunia - Bharat's app for daily news and videos

Install App

OMR-ல் 130 கிமீ வேகத்தில் வந்த கார்… இரு இளம் பெண்கள் பலி!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (09:23 IST)
சென்னையில் வேகமாக வந்த கார் மோதியதில் 23 வயதுடைய இரண்டு பெண்கள் சாலை விபத்தில் பலியாகினர்.


இவ்விரு பெண்கள் HCL ஸ்டேட் ஸ்ட்ரீட் சர்வீசஸ் நிறுவனத்தில் ஆய்வாளர்களாகப் பணிபுரிந்து வந்துள்ளனர். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.லட்சுமி மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த எஸ்.லாவண்யா என்பது தெரியவந்துள்ளது.

இரவு வேலை முடிந்து பழைய மகாபலிபுரம் சாலையை (ஓஎம்ஆர்) கடக்கும் போது, ​​அதிவேகத்தில் சென்ற கார் பின்னால் இருந்து மோதியது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 20 வயதான மோதிஷ் குமார் என்ற ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இரு பெண்கள் தலையில் பலத்த காயங்களுடன் இருந்தபோதும், டிரைவர் தப்பிக்க முயன்றார். ஆனால், அருகில் இருந்தவர்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பெண்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். லட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும், அனுமதிக்கப்பட்ட போது லாவண்யா ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், பின்னர் இறந்தார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

விபத்து நடந்தபோது கார் மணிக்கு 130 கிமீ வேகத்தில் சென்றதாக தாம்பரம் காவல் உதவி ஆணையர் (போக்குவரத்து) தெரிவித்தார். அவரை மருத்துவப் பரிசோதனை செய்ததில் விபத்து நடந்த போது அவர் குடிபோதையில் இல்லை என்று போலீஸார் கண்டுபிடித்தனர். தற்போது கைதாகியுள்ள ஓட்டுநர் மீது பல வழக்குபிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

அடுத்த கட்டுரையில்
Show comments