Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்னல் கோளாறு.. சரிசெய்ய சென்ற ஊழியர்கள்.. மோதிய சரக்கு ரயில்! – ஆம்பூரில் சோகம்!

Webdunia
திங்கள், 31 மே 2021 (09:01 IST)
ஆம்பூர் அருகே ரயில் சிக்னலை சரிசெய்ய சென்ற ஊழியர்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியில் உள்ள பெங்களூர் – சென்னை ரயில் மார்க்கத்தில் மழை பெய்ததால் சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதை ரயில்வே பொறியாளர் முருகேசன் மற்றும் பீகாரை சேர்ந்த உதவியாளர் பர்வேஷ்குமார் ஆகியோர் சரிசெய்ய சென்றுள்ளனர்.

சிக்னலை சரி செய்து விட்டு தண்டவாளத்தில் கொட்டும் மழையில் அவர்கள் நடந்து வந்து கொண்டிருந்தபோது அவ்வழியாக சென்ற சரக்கு ரயில் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பால், தயிர் விலை மீண்டும் அதிகரிப்பு.. ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வா?

இன்று முதல் ஆரம்பமாகும் கியூட் தேர்வுகள்.. தேர்வர்களுக்கு என்னென்ன நிபந்தனைகள்?

நீங்கள் எவ்வளவு முட்டாளாக இருக்கிறீர்கள் திரு.மு.க.ஸ்டாலின்? ரூபாய் இலச்சினை மாற்றத்தால் அண்ணாமலை ஆவேசம்!

வாடிக்கையாளர் சேவை மையத்தில் இந்தியில் மட்டுமே பதில்.. டாக்டர் ராமதாஸ் கண்டனம்..!

சவுதி அரேபியா அரசு மருத்துவமனைகளில் நர்ஸ் பணி.. விண்ணப்பிப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments