பிளஸ் 2 தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்! வேதாரண்யம் பகுதியில் ஆச்சரியம்..!

Mahendran
திங்கள், 6 மே 2024 (17:05 IST)
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில் அதில் இந்த தேர்வு எழுதிய இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் பெற்று இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்த நிலையில் இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியானது என்பதும் வழக்கம் போல் மாணவிகள் அதிக சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில் ஒட்டுமொத்தமாக 94 சதவீதத்திற்கும் அதிகமாக மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. 
 
இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பிளஸ் டூ தேர்வு எழுதிய இரட்டையர்கள் இருவருமே ஒரே மதிப்பெண் பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பஞ்ச நதிக்குளம் மேற்கு விக்டரி மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த இரட்டையர்களான நிகில் மற்றும் நிர்மல் ஆகிய இருவரும் 478 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரே பள்ளியில் படித்த இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் பெற்றிருப்பது ஆசிரியர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை.. இறப்பதற்கு முன் செய்த அதிர்ச்சி செயல்..!

பள்ளி மாணவர்களை தொழுகை செய்ய சொன்ன தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்.. அதிரடி நடவடிக்கை

ராகுல் காந்தி ராணுவத்தை அவமதித்தாரா? பிரியங்கா காந்தி விளக்கம்

திருச்சியில் திகில்: கல்லறையில் இருந்து வந்த பிரியாணி ஆர்டர் - அலறியடித்து ஓடிய டெலிவரி பாய்!

தம்பி விஜய்க்கு ஒன்னும் தெரியல!.. நயினார் நாகேந்திரன் பேட்டி!...

அடுத்த கட்டுரையில்
Show comments