Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துக்ளக் ஆசிரியர் சோ கவலைக்கிடம்

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2015 (12:09 IST)
"துக்ளக்' பத்திரிகை ஆசிரியர் சோ எஸ். ராமசாமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


 

மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சோ சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை, பிரதமர் மோடி,முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி, பா.ம.க. தலைவர் ராமதாஸ், விடுதலை. சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் என்.சி.பி.வடிவேல் உள்ளிட்ட முக்கியக் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர்.

கடந்த ஒன்றரை மாதங்களாக சிகிச்சை பெற்றுவரும் சோ ராமசாமியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து ஆபத்தான நிலையில் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments