Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.டி ரெய்டால் ஆடிப்போன தினகரன்: தேடிப்போய் மாட்டிக்கொண்ட சரத்குமார்!

ஐ.டி ரெய்டால் ஆடிப்போன தினகரன்: தேடிப்போய் மாட்டிக்கொண்ட சரத்குமார்!

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (11:16 IST)
அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை 6.30 மணி முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.


 
 
மத்திய துணை ராணுவப்படையின் பாதுகாப்புடன் வருமான வரித்துறையினர் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர், சமக தலைவர் சரத்குமாரை தொடர்ந்து, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அதிமுகவின் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரது வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
 
மேலும் சேப்பாக்கம் எம்எல்ஏக்கள் விடுதியில் உள்ள 5 அறைகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர். அதே போல டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
 
சுற்றி சுற்றி அதிமுக பிரமுகர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. முறையாக வரி செலுத்தாதது, ஆர்கே நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா நடப்பதாக வந்த புகாரையடுத்து இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
 
ஒரே நேரத்தில் அதிமுகவினர் மற்றும் அவர்களுக்கு தொடர்புடையவர்கள் என 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்து வரும் வருமான வரித்துறையின் சோதனையால் தினகரன் தரப்பு ஆடிப்போய் உள்ளது.
 
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் தினகரன் தரப்பினர் ஆர்கே நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா நடந்ததற்கான, 120 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வருகிறது. இதனால் தினகரன் தரப்பு ஆடிப்போய் உள்ளது. இந்த திடீர் வருமான வரித்துறை அதிரடி சோதனைய எதிர்பார்க்காத தினகரன் தரப்பு அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது தெரியாமல் திகைத்து வருகிறது.
 
சமக தலைவரும் நடிகருமான சரத்குமார் வீடு மற்றும் அவர் பிரச்சாரத்துக்கு செல்ல இருந்த வாகனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதில் 3 செல்போன்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. டிடிவி தினகரனை நேற்று சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார் சரத்குமார். இதனையடுத்து இன்று பிரச்சாரம் செய்யவும் இருந்தார். டிடிவி தினகரனை சந்தித்த பின்னரே சரத்குமாருக்கு இந்த சிக்கல் வந்ததாக கூறப்படுகிறது. ஒருவேளை டிடிவி தினகரனை சரத்குமார் சந்திக்காமல் இருந்திருந்தால் இந்த ரெய்டில் இருந்து தப்பித்து இருப்பாரோ என்னவோ.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி எழும்பூரில் இருந்து இந்த 2 ரயில்கள் புறப்படாது.. தாம்பரம் தான்..!

பீட்சா, பர்கர் சாப்பிட்ட கூடைப்பந்து வீராங்கனை உயிரிழப்பு; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

திடீரென தலைமை அலுவலகத்தை மாற்றும் அமேசான்.. என்ன காரணம்?

மணமகள் வீட்டார் மீது காரை ஏற்றிய மணமகன் உறவினர்.. திருமண வீட்டில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments