Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென டெல்லி சென்றது ஏன்? டிடிவி தினகரன் விளக்கம்

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (08:07 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, அடுத்த ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை ஆவார் என்று செய்தி வெளிவந்த நிலையில் நேற்று திடீரென டிடிவி தினகரன் தனி விமானத்தில் டெல்லி சென்றது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
சசிகலா விடுதலை குறித்தும், பாஜகவுடன் அமமுக கூட்டணி நடத்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் அவர் டெல்லி சென்றதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளிவந்தன
 
இந்த நிலையில் நேற்று காலை தனது உதவியாளருடன் தனி விமானத்தில் டெல்லி சென்ற டிடிவி தினகரன் நேற்று மாலை மீண்டும் சென்னை திரும்பினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது ’தான் டெல்லி சென்றது தனிப்பட்ட காரணங்களுக்காக என்றும் அரசியல் குறித்து எதுவும் இல்லை’ என்றும் அவர் கூறினார். இருப்பினும் அவர் டெல்லி சென்றது ஏன் என்பது குறித்த தகவல் இன்னும் மர்மமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்.. ஜாமீன் பெற்று மீண்டும் அதே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை..!

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்......??? விஜய்க்கு கேள்வி எழுப்பிய தமிழிசை

அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து பேசக்கூடாது: ரங்கராஜன் நரசிம்மனுக்கு, நிபந்தனை ஜாமீன்..!

பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து: சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

5 மாநில ஆளுநர்கள் மாற்றம்: ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments