Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாக்டருக்கு படித்துவிட்டு சாலையில் பிச்சை எடுத்த திருநங்கை – கிளினிக் அமைத்துக் கொடுத்த காவலர்!

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2020 (15:41 IST)
எம்பிபிஎஸ் படித்துவிட்டு அந்த தொழிலை தொடர முடியாமல் பிச்சை எடுத்து வந்த திருநங்கைக்கு போலிஸார் கிளினிக் அமைத்துக் கொடுத்துள்ளனர்.

மதுரையில் திலகர் திடல் காவல் நிலைய சரகத்தில் போலிஸார் ரோந்து சென்ற போது அங்கு தனியாக நின்று கொண்டிருந்த திருநங்கையை பார்த்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் தான் மருத்துவப் படிப்பை முடித்துள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால் அதை காவலர்கள் நம்பவில்லை. இதையடுத்து அவரை காவல் ஆய்வாளர் கவிதா விடம் அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவர் தன் தோழியின் மூலமாக தனது சான்றிதழ்களை கொண்டு வந்து காட்டியுள்ளார். இதையடுத்து தான் மருத்துவப் படிப்பை முடித்திருந்தாலும் சமூகத்தில் திருநங்கைகளுக்கு அங்கிகாரம் இல்லாததால் அந்த தொழிலை தொடர முடியாமல் இப்படி பிச்சை எடுப்பதாக சொல்லியுள்ளார். இதையடுத்து அவருக்கு காவல் ஆய்வாளர் கவிதா  உயரதிகாரிகளின் உதவியுடன் கிளினிக் அமைத்துக்கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments