Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போக்குவரத்து VS காவல்துறை மோதல் கைவிடப்படுமா.?..! துறை செயலாளர்கள் பேச்சுவார்த்தை..!!

Senthil Velan
சனி, 25 மே 2024 (12:41 IST)
தமிழக போக்குவரத்து துறை மற்றும் காவல் துறையினர் இடையே பிரச்சினை நீடித்து வரும் நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திரரெட்டியுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
 
நாகர்கோவில் செட்டிக்குளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி காவல் சீருடையில் இருப்பதால் பயணச்சீட்டு எடுக்க முடியாது என கூறி வாக்குவாதம் செய்தார்.இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் பயணச்சீட்டு எடுக்க வேண்டும் என்றும் வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது என்றும் போக்குவரத்து துறை விளக்கம் அளித்திருந்தது.
 
இதைத் தொடர்ந்து, சீட் பெல்ட் அணியாதது, நோ பார்க்கிங்கில் பேருந்தை நிறுத்தியது, அதிக பயணிகளை ஏற்றியது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக, அரசுப் பேருந்துகளுக்கு  தமிழக போலீஸார் அபராதம் விதிக்கத் தொடங்கினர். இதனால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.
 
இந்நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திரரெட்டியுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டார்.

ALSO READ: ஜெயலலிதா இந்துத்துவா தலைவரா? அறியாமையில் பேசும் அண்ணாமலை..! கொதித்தெழுந்த சசிகலா..!!
 
சட்ட ரீதியாக போக்குவரத்து மற்றும் காவல் துறை இடையே நடந்துவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments