Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (17:34 IST)
கனமழை எதிரொலியால் சென்னையில் போக்குவரத்து சில பகுதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகரில் வாகன போக்குவரத்தில் தற்போதைய நிலவரம் ரங்கராஜபுரம் இரண்டு சக்கர வாகனம் சுரங்கப்பாதை தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது
 
சென்னை மாநகர மழைநீர் வடிகால் வாரிய சீரமைப்பு பணியை அண்ணாசாலையில் மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக கேகே நகர் ஜி.எச் எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில் வடிகால் சீரமைக்கும் பணியை எளிதாக்கும் வகையில் உதயம் திரையரங்கம் நோக்கி செல்லும் போக்குவரத்து எதிர்திசையில் அனுமதிக்கப்படுகிறது 
 
அதேபோல் உதயம் சந்திப்பில் காசி முனையிலிருந்து அண்ணா பிரதான சாலை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மட்டும் அசோக்பில்லர் நோக்கி திருப்பி விடப்படுகின்றன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வேங்கைவயல் செல்லும் வழிகளில் திடீரென போலீஸ் குவிப்பு.. என்ன காரணம்?

மும்பை தாக்குதல் பயங்கரவாதி: இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி..!

மெக்சிகோ வளைகுடா மற்றும் மலையின் பெயரை மாற்றினார் டிரம்ப்.. புதிய பெயர் அறிவிப்பு..!

நாளை மதுரை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. டங்க்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பாராட்டு விழா?

அடுத்த கட்டுரையில்
Show comments