Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வரும் அமித்ஷா; அதிமுக போட்ட உத்தரவு! – அப்செட்டான எம்.எல்.ஏக்கள்!

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2020 (08:28 IST)
நாளை அரசு விழாவில் பங்கேற்க வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்க அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென தலைமை உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாளை சென்னையில் நடைபெற உள்ள நீர்தேக்க திட்டம் மற்றும் நலப்பணி திட்டங்களை தொடங்கி வைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வர உள்ளார். அரசு விழாவிற்கு பிறகு பாஜக நிர்வாகிகள் கூட்டத்திலும் கலந்து கொண்டு அவர் பேச உள்ளார்.

இந்நிலையில் அமித்ஷா கலந்து கொள்ளும் அரசு விழாவில் அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் கலந்து கொள்ள வேண்டும் என கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் இன்று இது தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஈபிஎஸ் – ஓபிஎஸ் தலைமையில் நடைபெறுகிறது.

சென்னை வரும் அமித்ஷா கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் பேசக்கூடும் என்பதால் இதுகுறித்து அதிமுக இன்று விவாதித்து முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அமித்ஷா விழாவில் எல்லா எம்.எல்.ஏக்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்ற தலைமையின் உத்தரவு சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பூரில் நடந்தது ஆணவக் கொலை இல்லை! - போலீஸார் கொடுத்த புது விளக்கம்!

வக்பு மசோதா.. வாக்கெடுப்பில் அதிமுக எம்பிக்களின் நிலை என்ன?

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி மேலாளர் தற்கொலை: அன்புமணி கண்டனம்..!

கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா: மயிலாப்பூரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

ஏப்ரல் 5 வரை வெளுத்து வாங்க போகும் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments