Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழைய நிலைக்கே போகும் தக்காளி விலை: மார்கெட் அப்டேட்!

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (16:07 IST)
கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி தற்போது கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

 
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கனமழையால் தக்காளி வரத்து குறைந்த நிலையில் கிலோ 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்றது. ஆனால் கடந்த மாதாம் இந்த நிலைமை தலைகீழாக மாறியது. விவசாயிகள் பலரும் தக்காளி பயிர் செய்திருந்த நிலையில் எதிர்பார்த்த விளைச்சல் கிடைத்தது.
 
சந்தைகளில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. வரத்து அதிகரித்ததன் காரணமாக தக்காளி கிலோ ரூ.2 அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்தது. இந்நிலையில், தென் மாவட்டங்களில் பெய்த திடீர் மழை காரணமாக அந்த பகுதிகளில் நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டது. 
 
இந்த மாத தொடக்கத்தில் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.8-க்கும், சில்லரை கடைகளில் ரூ.10-க்கும் விற்கப்பட்டது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ29-க்கும், மார்கெட்டில் உள்ள சில்லரை கடைகளில் ஒரு கிலோ ரூ.35-க்கும் விற்கப்பட்டது. 
 
தக்காளி தற்போது கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் தக்காளி லாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாலும் சுங்கக் கட்டண உயர்வும் காரணங்களாக கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு: டாக்டர் ராமதாஸ்..

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை: மூத்த வழக்கறிஞர் தகவல்..!

பாஜக கூட்டணியில் சீமான்.. ரஜினி ஆதரவு.. ஜூனியர் விகடன் கட்டுரையின் சாராம்சம்..!

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? மத்திய அரசின் பதிலால் என்ன சர்ச்சை?

அடுத்த கட்டுரையில்
Show comments