Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு!

Webdunia
திங்கள், 6 ஜனவரி 2020 (10:40 IST)
வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு இன்று நடைபெற்றது.

மார்கழி மாதத்தின் வளர்பிறை நாளின் பதினொன்றாம் நாளில் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பின் போது பெருமாளுடன் சொர்க்க வாசலை கடந்தால் நேரடியாக சொர்க்கத்திற்கு செல்லலாம் என நம்பப்படுகிறது.

இன்று சொர்க்கவாசல் திறப்பு என்பதால் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அதிகாலையிலேயே மக்கள் கூட்டம் படையெடுக்க தொடங்கியது. காலை 4.45 அளவில் தொடங்கிய சொர்க்க வாசல் புகும் வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சென்னையில் உள்ள திருவெல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே வந்து பெருமாளை வழிபட தொடங்கியுள்ளனர்.

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் திரளான பக்தர்கள் இன்று காலை முதல் தரிசனம் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

இனிமேல் குளுகுளுவென பயணம் செய்யலாம்.. சென்னையின் முதல் ஏசி மின்சார ரயி தொடக்கம்..

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments