Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று விவசாயிகளுக்காக முழு அடைப்பு: நிலவரம் என்ன?

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (07:11 IST)
திமுக தலைமையில் சமீபத்தில் கூடிய எதிர்க்கட்சிகள் இன்று தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு கொடுத்திருந்த நிலையில் தமிழகத்தின் இன்று காலை பந்த் குறித்த நிலைமை என்ன? என்பது குறித்து தற்போது பார்ப்போம்



 


முழு அடைப்புப் போராட்டத்தால் சென்னையில் இன்று 15,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மத்திய அரசு அலுவலகங்கள். மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழக்கத்தை விட அதிகரிக்கப்பட்டுள்ளது.

முழு அடைப்புப் போராட்டத்தை அடுத்து திருவாரூர் மாவட்டத்தில் 10,000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரியிலும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் அம்மாநிலத்திலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

முழு அடைப்புப் போராட்டத்தால் மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி சந்தையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதே நேரத்தில்  மதுரையில் அரசு பேருந்துகள் காவல்துறை பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றது

தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் கணிசமான அளவில் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் 600 போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். ரயில்கள் வழக்கம்போல் சென்று கொண்டிருக்கின்றன.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பொதுச்செயலாளர் யார், பொருளாளர் யார் என்றே தெரியவில்லை'... ஆடியோ விவகாரம் - என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?

தவெக உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது: தி.மு.க.-அ.தி.மு.க. அதிர்ச்சி

சைபர் க்ரைம் அதிகாரிக்கே வந்த மோசடி கால்.. அதிர்ச்சி வீடியோ..!

என்னை கொல்ல வந்தவர்களை கூட மன்னிப்பேன். துரோகிகளை மன்னிக்க மாட்டேன்: துரைமுருகன்

தயவு செய்து இறந்து விடு.. ஜெமினி ஏஐ அளித்த கட்டுரையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments