தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னரே வாக்காளர்கள் வரிசைகளில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
இன்று நடைபெறும் முதல்கட்ட வாக்குப்பதிவில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அடுத்தகட்ட தேர்தல் வரும் 30ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் கீழ்க்கண்ட ஆவணங்கள் இருந்தால் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி அறிவிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் பின்வருமாறு:
பாஸ்போர்ட், ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம், அரசு பணியாளர்களின் புகைப்பட அடையாள அட்டை, வங்கி அல்லது அஞ்சல் கணக்கு புத்தகங்கள், 100 நாள் பணிக்கான அட்டை, மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, ஓய்வூதிய ஆவணம், ஸ்மார்ட் ரேஷன் கார்டு, பாராளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் பான் கார்டு