Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு அவசர சட்டம் ; நாளை அல்லது நாளை மறுநாள் - ஓ.பி.எஸ் நம்பிக்கை

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2017 (13:40 IST)
ஜல்லிக்கட்டு தொடர்பான நடைமுறைகள் முடிவுக்கு வந்துள்ளதால், நாளை அல்லது நாளை மறுநாள் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டம் இயற்றப்படும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.


 

 
அந்நிலையில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்பொழுது ஜல்லிகட்டு வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மத்திய அரசால் ஒன்றும் செய்ய முடியாது எனவும் அதே நேரம் தமிழக அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம் என பிரதமர் கூறினார். 
 
இதனால், நேற்று டெல்லியிலேயே தங்கிய ஓ.பி.எஸ், தமிழக அரசு சார்பில் அவசர சட்டம் கொண்டு வருவது பற்றி, சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினர். அதன்படி, இன்று காலை செய்தியாலளர்களை சந்தித்து பேசிய அவர், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு இன்னும் ஓரிரு நாளில் கொண்டு வரும். எனவே, மாணவர்கள் தங்கள் போராட்டங்களை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
 
ஆனால், ஜல்லிக்கட்டிற்காக போராடிவரும் போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். அவரச சட்டத்தால் எந்த பயனும் இல்லை. ஒவ்வொரு வருடம் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு நடைபெறும் வகையில், நிரந்தரமான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.பி.எஸ் “அவசர சட்டம் இயற்றுவதற்கான நடைமுறைகள் முடிவடைந்து விட்டது. அந்த வரைவு நகல் உள்துறை, வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்டு நாளை அல்லது நாளை மறுநாள் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டம் கொண்டு வரப்படும். இதற்கு எந்த தடை வந்தாலும், அதை தமிழக அரசு முறியடிக்கும்” என அவர் தெரிவித்தார். 
 
அதேபோல் ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாடிவாசல் வழியாக மாடு ஓடுவதை நீங்கள் விரைவில் பார்ப்பீர்கள் அவர் கூறினார்.

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments