Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவிலிருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள்; 20 நாட்கள் கண்காணிப்பு

Arun Prasath
வெள்ளி, 31 ஜனவரி 2020 (13:06 IST)
கொரனா வைரஸ் உலகம் முழுவதிலும் பல நாடுகளில் பரவி வரும் நிலையில் சீனாவிலிருந்து தமிழகம் திரும்பிய கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மாணவர்கள் 9 பேரையும் முன்னெச்சரிக்கையாக 20 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படவுள்ளனர்.

கொரனா வைரஸால் சீனாவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இலங்கை. பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, தென் கொரியா ஆகிய நாடுகளிலும் கொரனா வைரஸ் பரவி வருகிறது.

இதே போல் நேற்று கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கொரனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. மேலும் தமிழகத்தில் திருவண்ணாமலைச் சேர்ந்த ஒருவருக்கு கொரனா வைரஸ் அறிகுறி இருப்பதாக வெளிவந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சீனாவிலிருந்து தமிழகம் வந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த மாணவர்கள் 9 பேர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டு 20 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படவுள்ளனர்.

எனினும் மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி எதுவும் இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் அதிகம்: ஆய்வுக்கு பின் குஷ்பு பேட்டி..!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்..! சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றம்..!!

துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்திக்கு தமிழக அரசின் முக்கிய பதவி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments