Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நொடிப்பொழுதில் தமிழகத்தில் ஆட்சி கலையும்: ஸ்டாலின் ஆருடம்!

நொடிப்பொழுதில் தமிழகத்தில் ஆட்சி கலையும்: ஸ்டாலின் ஆருடம்!

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (17:01 IST)
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாததால் விரைவில் தமிழகத்தில் ஆட்சி கலையும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


 
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேர் வாபஸ் வாங்கியதால் சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
 
இந்நிலையில் தஞ்சையில் இன்று நடைபெற்ற திமுக நிர்வாகி அஞ்சுகம் பூபதியின் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தமிழகத்தில் தற்போது சிந்திக்கக்கூடிய நிலையிலேயோ அல்லது செயல்படக்கூடிய நிலையிலேயோ ஆட்சி இல்லை.
 
ஆட்சி மாற்றம் விரைவில் வரும் என சிலர் கூறினார்கள். விரைவில் அல்ல நொடிப்பொழுதில் ஆட்சி மாற்றம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆளுநரை விரைவில் சந்தித்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தவுள்ளோம். ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆட்சி கலைக்கப்படும் வரை போராடுவோம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு பிடிவாரண்ட்..! சிறுமி பாலியல் வழக்கில் அதிரடி..!!

விருப்ப ஓய்வை வாபஸ் பெற விகே பாண்டியன் முடிவு.. மீண்டும் ஐஏஎஸ் அதிகாரி ஆகிறாரா?

பங்குச்சந்தையில் மைக்ரோசாஃப்டை முந்திய ஆப்பிள்.. ஏஐ டெக்னாலஜி செய்த மாயமா?

நீட் வினாத்தாள் கசியவில்லை.! அரசியலாக்க வேண்டாம்.! மத்திய அமைச்சர் வேண்டுகோள்..!!

டெல்லிக்கு தண்ணீர் தர முடியாது: உச்சநீதிமன்றத்தில் இமாச்சல் பிரதேசம் திட்டவட்டம்..!

அடுத்த கட்டுரையில்