Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடு தேடி பள்ளிகள்: தமிழக அரசு புது திட்டம் சென்னையில் துவக்கம்!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (15:41 IST)
மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வீடுகளுக்கே சென்று பாடம் எடுக்க ’வீடு தேடி பள்ளிகள்’ திட்டம் அறிமுகம். 

 
1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் தற்போது ’வீடு தேடி பள்ளிகள்’ என்ற புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது. 
 
ஆம், இந்த திட்டத்தின் கீழ்  எல்கேஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வீடுகளுக்கே சென்று பாடம் எடுப்பார்கள். விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் இந்த திட்டத்தை சென்னையில் இருந்து துவங்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 
இது மட்டுமின்றி வீதி வகுப்பறை என்ற பெயரில்  தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் வேறு திட்டத்தை செயல்படுத்தவும் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments