Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி நாளில் 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி - தமிழக அரசு

Webdunia
புதன், 1 நவம்பர் 2023 (11:28 IST)
தீபாவளி நாளில் இந்த ஆண்டும் 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என தமிழக அரசு  அறிவித்துள்ளது
 
இதன்படி தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி என்றும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
மேலும் தீபாவளியன்று காற்றின் தரம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும்  பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும், திறந்தவெளியில் ஒன்றாக கூடி பட்டாசு வெடிப்பதாக இருந்தால்  முன் அனுமதி பெற வேண்டும் என்றும், மருத்துவமனை, கோவில் மற்றும் அமைதி தேவையான பகுதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும்,  அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்துவிட்டார்.. திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து சித்தர்..!

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்.. ரெய்டு சென்ற போலீஸ் அதிகாரி படுகாயம்..!

இளைஞரின் செல்போனை திருடிய குரங்கு.. கால் அட்டெண்ட் செய்து பேசியதா?

இன்று இரவுக்குள் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை அலெர்ட்!

வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments