Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடனடியாக தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்; ஸ்டாலின் கோரிக்கை

Webdunia
திங்கள், 14 மே 2018 (14:52 IST)
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்துள்ள நிலையில் நாளையே தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

 
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் வரைவு திட்டத்தை தாக்கல் செய்துள்ளது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜராகி வரைவு திட்டத்தை நீதிபதி மிஸ்ரா முன்னிலையில் தாக்கல் செய்தார். மேலும் இதுதொடர்பான வழக்கை 16ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
 
வரைவு திட்டம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை நாளையே கூட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிகள் விவசாய அமைப்புகளின் கூட்டத்தை தமிழக அரசு நாளையே கூட்ட வேண்டும். இந்த அனைத்துக் கட்சி கூட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், அதனை சட்ட ரீதியாக செயல்படுத்துவதை வலியுறுத்தும் வகையிலும் அமைய வேண்டும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments