நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவு! – தேர்தல் ஆணையம் ஆலோசனை!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (13:57 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில் ஒரே நாளில் தேர்தல் முடிவுகளை வெளியிட திட்டமிட்டு வருவதாக தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற்று முடிந்த நிலையில் வாக்குகள் எண்ணும் பணி மே 2ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் வாக்குகள் எண்ணும் பணியை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள்ள தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு “கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வாக்கு எண்ணும் பணிகளை நடத்த தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனையை மேற்கொண்டு வருகிறது. இதனால் வாக்கு எண்ணும் மேஜைகள் எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. வாக்கு எண்ணும் பணியை நள்ளிரவு 12 மணிக்குள் முடித்து தேர்தல் முடிவுகளை வெளியிட திட்டமிட்டு வருகிறோம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயின் மாத்திரைகள் தரம் குறைந்தவைகளா? திரும்ப பெற உத்தரவு..!

சட்டமன்ற தேர்தலுக்கு முன் வரும் ராஜ்யசபா தேர்தல்.. தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பது யார்?

அதிமுக இடத்தை விஜய் பிடித்துவிடுவாரா? மீண்டும் திமுக ஆட்சியா? அரசியல் விமர்சகர்களின் கணிப்பு..!

விஜய்யின் தவெக 20 தொகுதிகளில் தான் வெற்றி பெறுமா? அதிமுக, திமுகவின் நிலை என்ன?

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அடுத்த கட்டுரையில்
Show comments