Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக காங்கிரஸ் தலைவர் விரைவில் மாற்றம் - குஷ்பு அறிவிப்பு

Webdunia
திங்கள், 14 மே 2018 (17:05 IST)
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் விரைவில் மாற்றப்படுவார் என காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

 
தமிழக காங்கிரஸ் கட்சியில் எப்போது கோஷ்டி பூசல் அதிகமாகவே காணப்படும். தலைமைக்கு கட்டுப்படாமல் பலரும் நடந்து கொள்வார்கள். அதுபோன்ற ஒரு பிரச்சனையில்தான் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருநாவுக்கரசு அந்த பதவியில் அமர்த்தப்பட்டார். 
 
இந்நிலையில், இன்னும் 2 மாதங்களில் அவரும் மாற்றப்படுவார் என குஷ்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசு இன்னும் கூட சிறப்பாக செயல்பட்டிருக்கலாம்.  தமிழக காங்கிரஸை ஒற்றுமையுடன் வழிநடத்தி, மக்களிடம் கட்சியை கொண்டு செல்லும் வல்லமை படைத்த ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். கர்நாடாக உள்ளிட்ட மாநிலங்கள் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து காங்கிரஸ் எப்படி செயல்படுகிறதோ, அதுபோல் மக்கள் பிரச்சனைகளுக்கு காங்கிரஸ் குரல் கொடுக்க வேண்டும் என குஷ்பு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments