Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் முக்கிய ஆலோசனை: அதிரடி அறிவிப்பு வருமா?

Webdunia
திங்கள், 15 ஜூன் 2020 (06:58 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 38 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்தை தாண்டிவிட்டது. எனவே தமிழக அரசு அதிரடி முடிவு எடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது
 
இதனையடுத்து இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மருத்துவக்குழுவுடன் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை செய்ய உள்ளார். இந்த ஆலோசனைக்கு பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமிருக்கும் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள வைரசை தடுக்க அதிரடி முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் நாளை பிரதமருடன் முதல்வர் ஆலோசனை செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இன்று நடக்கும் மருத்துவ குழுவினர்களுடான ஆலோசனை மற்றும் நாளை நடைபெற உள்ள பிரதமருடனான ஆலோசனை ஆகியவைகளுக்கு பின் முதல்வர் சில அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments