தளர்வுகளுடன் ஊரடங்கா? தளர்வுகள் இல்லாத ஊரடங்கா? முதல்வர் ஆலோசனை!

Webdunia
வியாழன், 27 மே 2021 (09:23 IST)
தமிழகத்தில் ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கு வரும் திங்கட்கிழமையுடன் உடன் முடிவடைகிறது. இதனை அடுத்து தளர்வுகள் இல்லாத ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது தளர்வுகள் உடன் உள்ள ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இது குறித்து ஆலோசனை செய்ய உள்ளார். இந்த ஆலோசனைக்கு பின் அவர் ஊரடங்கு நீட்டிப்பது குறித்த அறிக்கை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருவதால் ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு இருந்தாலும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தான் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. நேற்று தமிழகத்தில் 34 ஆயிரத்துக்கும் குறைவாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமே இல்லை.. எதிர்காலத்தில் ஏறுமா? இறங்குமா?

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு..!

நீதிபதி சுவாமிநாதன் பணியில் இருந்து நீக்க நோட்டீஸ்? இந்தியா கூட்டணி திட்டம்?

ஓபிஎஸ்ஐ அடுத்து திடீரென டிடிவி தினகரனை சந்தித்த அண்ணாமலை.. என்ன திட்டம்?

இன்று புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம்.. க்யூ ஆர் கோடு அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments