Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பூரில் நகைக்கொள்ளை; மகாராஷ்டிராவில் பதுங்கல்! – சிக்கிய திருடர்கள்!

Webdunia
ஞாயிறு, 6 மார்ச் 2022 (11:16 IST)
திருப்பூர் நகைக்கடையில் கொள்ளையடித்த திருடர்கள் மகாராஷ்டிராவில் பிடிபட்டுள்ளனர்.

திருப்பூர் யூனியன் மில் சாலையில் நகைக்கடை மற்றும் அடகுக் கடை வைத்து நடத்தி வருபவர் ஜெயக்குமார். கடந்த வியாழக்கிழமை வழக்கம்போல இரவு கடையை பூட்டி விட்டு மறுநாள் காலை கடையை திறந்தபோது அங்கிருந்த தங்க நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்துள்ளது. மொத்தமாக 3 கிலோ தங்கம், 9 கிலோ வெள்ளி மற்றும் 25 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராவை போலீஸார் ஆராய்ந்த நிலையில் 4 பேர் அப்பகுதியில் நடமாடுவது பதிவாகியிருந்துள்ளது. அதே நான்கு பேரின் உருவம் திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகியிருந்துள்ளது. இதுகுறித்த விசாரணையில் வட மாநிலத்தை சேர்ந்த 4 பேர் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பீகாரை சேர்ந்த அந்த நான்கு பேரும் நாக்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் தமிழக அழைத்துவரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments