Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேஸ்புக் லைவ் வீடியோவில் தற்கொலை செய்துகொண்ட நபர் –அதிர வைத்த சம்பவம்!

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2020 (15:17 IST)
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் எனும் ஓட்டுனர் பேஸ்புக் லைவ்வில் தனது தற்கொலையை பதிவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் மற்றும் சுகாசினி தம்பதிகளுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார். ராம் குமார் ஓட்டுனராக பணிபுரிய சுகாசினி பனியன் கம்பெனியில் வேலைப் பார்த்து வந்துள்ளார். நேற்று வழக்கம் போல சுகாசினி வேலைக்கு சென்றுவிட, மகன் விடுமுறை என்பதால் தாத்தா பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளான். இதனால் வீட்டில் தனியாக இருந்துள்ளார் ராம்குமார்.

அப்பொது பேஸ்புக் பக்கத்தில் லைவ் வீடியோ ஆன் செய்துவிட்டு பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதைப் பார்த்த நண்பர்கள் மனைவிக்குத் தகவல் தெரிவித்து வீட்டுக்கு வருவதற்குள், அவர் உயிர் பிரிந்துள்ளது. இதையடுத்து போலிஸாருக்கு தகவல் சொல்லப்பட அவர்கள் வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதிய கடிதத்தில் ‘‘கேடுகெட்ட  உலகமிது. இங்கு வாழ விருப்பமில்லை. யாரும் பீல் பண்ணாதீங்க’ என தெரிவித்துள்ளார். இந்த சம்பவமானது அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம்: கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன தவெக தலைவர் விஜய்..!

நடுவானில் சர்க்கரை நோயாளிக்கு வந்த ஆபத்து.. உயிரை காப்பாற்றிய மருத்துவர்..!

பாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை: டொனால்ட் டிரம்ப்..!

சபரிமலையில் நாளை மண்டல பூஜை: பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments