Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ்-ஐ கேக்காம செயல்படாதீங்க..! – எடப்பாடியாருக்கு எதிராக அதிமுகவினர் போஸ்டர்?

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (12:16 IST)
அதிமுகவில் இபிஎஸ்-ஓபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படும் நிலையில் எடப்பாடியாருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவிய நிலையில் எதிர்கட்சியாக உள்ளது. இந்நிலையில் எதிர்கட்சி தலைவராக அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கட்சிக்குள் இபிஎஸ்-ஓபிஎஸ் இடையே முரண்பாடு நிலவுவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிப்பட்டு வந்தது.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியத்தில் அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் அதிமுக தோல்வியைடைந்ததற்கு ஓபிஎஸ் பேச்சை கேட்காமல் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டதே காரணம் என குற்றம் சாட்டியுள்ளதோடு, தொடர்ந்து ஓபிஎஸ்-ஐ புறக்கணித்தால் தலைமை கழகத்தை முற்றுகையிடுவோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் பலி.. தமிழக முதல்வர் இரங்கல்..!

செங்கோட்டை- மயிலாடுதுறை உள்பட 9 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: தென்னக ரயில்வே

இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.. முதல்வர் தொடங்கி வைக்கிறார்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது. தொடரும் சிங்கள படையின் அட்டகாசம்.

திருப்பதி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு.. தேவஸ்தானம் மீது முதல்வர் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments