Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக்- டாக் வீடியோவில் கொலை மிரட்டல் : இருவர் கைது!

Webdunia
ஞாயிறு, 2 ஜூன் 2019 (11:37 IST)
கணியூரில் வசித்து வந்தவர் துரைபாண்டி (22). இவரது நண்பர் பிரகாஷ் (22). இவ்விருவரும் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்துவந்துள்ளனர். அப்பொழுது ஆட்டோ ஓட்டுநர் பாபு எனபவருடன் ஏற்பட்ட தகராறில்  இருவரும், பாபுவை சரமாரியாகத் தாக்கினர்.
இதுகுறித்து பாபு மடத்துகுளம் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார்.இதுசம்பந்தமாக துரைபாண்டி உட்பட 4 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.இதில் பிணையில் வந்த துரைபாண்டி தன் நண்பன் பிரகாஷுடன் கடந்த 27 ஆம் தேதி காவல்நிலையத்தில் கையெழுத்திட வந்தனர்.
 
இருவரும் கையெழுத்திட்டுவிட்டி வெளியே வந்தபோது இருவரும் செல்ஃபி எடுத்துள்ளனர். அதில் சாட்சி கூறுபவர்களை வெட்டுவோம் என்ற கானா பாடல் ஒலிக்கும் விதத்தில் டிக்-டாக் வீடியோவை பதிந்து வெளியிட்டுள்ளனர்.
 
இதையடுத்து புகார் அளித்தவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் துரைபாண்டி , பிரகாஷ் ஒருவரும் செயல்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் தற்போது இவ்விருவர் மீதும் போலீஸார் கொலைமிரட்டல் வழக்குப் பதிந்தனர். தலைமறைவான இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments