Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீலகிரி அருகே குடியிருப்புப் பகுதியில் புலிகள் நடமாட்டம்: அச்சத்தில் பொதுமக்கள்

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2016 (18:41 IST)
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குடியிருப்புப் பகுதியில் புலிகள் சுற்றித் திரிவதாகவும், புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


 

 
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நெலாக்கோட்டை குடியிருப்பு பகுதிக்குள் புலி சுற்றித் திரிவதாக, பொதுமக்கள் கூறி வந்த நிலையில், நேற்று  புலி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதர் ஒன்றின் அருகே, புலி 2 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் படுத்து கிடந்ததை மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்துச் சென்றனர். இதையடுத்து, வனத்துறையினர் பட்டாசு வெடித்து புலியை வனப்பகுதிக்குள் விரட்டினர். 
 
புலி நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை மூலம் ஒன்பது கேமராக்கள் பொருத்தப்பட்டன. புலியின் நடமாட்டத்தால் குடியிருப்புவாசிகளும், தேயிலை தோட்டத் தொழிலாளர்களும் அச்சமடைந்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜியோ ஹாட்ஸ்டார் இல்ல.. இனிமேல் JioStar தான்..! ஜியோ டிஸ்னி இணைப்பின் புதிய தளம்!

முஸ்லிம் வாக்குகள் எங்களுக்கு தேவையில்லை: பாஜக பேச்சால் சர்ச்சை

13 எம்.எல்.ஏ வீடுகளுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்! பற்றி எரியும் மணிப்பூர்! - அமித்ஷா எடுக்க போகும் நடவடிக்கை என்ன?

தமிழுக்கு பதிலாக பிரெஞ்ச் மொழி படிக்கிறேன்: அமைச்சர் அன்பில் மகேஷ் மகன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments