Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக் - டாக் செயலியால் விபரீதம் : +2 மாணவிகளுக்கு தண்டனையால் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 1 மார்ச் 2019 (09:59 IST)
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளில் படிக்கும் +2 மாணவிகள் சில ஒரு வாரத்துக்கு முன்பு தங்களது ஆசிரியர்களை செல்போனில் படம் எடுத்துள்ளனர்.
இதனையடுத்து அந்த வீடியோ காட்சிகளை செல்போனில் டிக் - டாக் ஆப் மூலம் கேலி கிண்டல் செய்து வெளியிட்டனர். இந்த வீடியோ காட்சிகள் வேகமாக பரவியது. இந்த வீடியோ குறித்து கடைசியாகத்தான் ஆசிரியர்களுக்கு தெரிந்தது. 
 
எனவே இது குறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் பள்ளி தாங்கள் பணியாற்றும் பள்ளி நிர்வாகிகளிடம் புகார் அளித்துள்ளனர். 
 
இதனையடுத்து பள்ளி நிர்வாக  தீவிரமாக விசாராணை நடத்தியது. இதில் டிக் -டாக் செயலியில் ஆசிரியர்களை கேலி செய்ததாக பிளஸ் மாணவிகள் 17 பேர் அடையாளம் காணப்பட்டனர். அம்மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் பள்ளி நிர்வாக  உறுதியாக இருந்தது. மேலும் அந்த  மாணவிகள் அரசுத் தேர்வுக்கு பள்ளியில் இருந்து படிக்க தடை விதிக்கப்பட்டதாக தெரிவிகிறது.
 
அதாவது அம்மாணவிகள் 17பேரும் வீட்டிலிருந்தபடி படித்து நேரடியாக பள்ளிக்கு வந்து தேர்வு எழுதுமாறு பள்ளி நிர்வாகம் அவர்களுக்கு தண்டனை வழங்கியுள்ளது.
 
இன்று +2 மாணவிகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில் மானவிகள் ஆசிரியைகளை கேலி கிண்டல் செய்து டிக் -டாக் செயலியில் வீடியோ வெளியிட்ட விவரகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9 வயது பள்ளி மாணவி மதிய உணவின்போது திடீர் மரணம்.. மாரடைப்பா?

இனி Unreserved பெட்டியில் 150 பேருக்கு மட்டுமே அனுமதி?? ரயில்வே அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் பயணிகள்!

ஆடம்பர கார், அடுக்குமாடி குடியிருப்பு, கிலோ கணக்கில் நகைகள்.. கோடிக்கணக்கில் டெபாசிட்.. எஞ்சினியருக்கு ரூ.250 கோடி சொத்தா?

கணவருடன் கள்ளத்தொடர்பு.. இளம்பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்த உதைத்த மனைவி..

வெறும் 9 கிலோவில் ஒரு சக்கர நாற்காலி.. ஆட்டோவில் கூட எளிதில் கொண்டு செல்லலாம்.. சென்னை ஐஐடி சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments