Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று கனமழை: மின்னல் தாக்கியதில் 3 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 27 செப்டம்பர் 2015 (07:50 IST)
தமிழ்நாட்டின் அநேக இடங்களில் நேற்று பெய்த கனமழையின் போது மின்னல் தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.


 
 
அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தை ஒட்டிய காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந் பழனிச்சாமி என்பவர் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் மேய்த்த 8 ஆடுகளில் 7 ஆடுகள் உயிரிழந்தன.
 
விளாகம் கிராமத்தில் தையமுத்து என்ற பெண் இடிதாக்கி உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 3-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் ஸ்ரீ கிருஷ்ணா மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.
 
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, சாயல்குடி, முதுகுளத்தூர் மற்றும் கமுதி சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கோவை மாவட்டம் வால்பாறையில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக சோலையாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது.

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

Show comments