Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக டூ திமுக; மீண்டும் திமுக டூ தேமுதிக

Webdunia
வியாழன், 7 ஜூலை 2016 (18:36 IST)
தேமுதிகவிலிருந்து விலகி திமுகவுக்கு சென்ற, முக்கிய கட்சி நிர்வாகிகள் மூன்று பேர், இன்று மீண்டும் தேமுதிகவிற்கு திரும்பியுள்ளனர்.


 

 
சட்டமன்ற தேர்தலின் போது, விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சந்திரகுமார் தலைமையில் சிலர் தேமுதிகவிலிருந்து வெளியேறினர்.
தேர்தலில் தேமுதிக படுதோல்வி அடைந்தது. இதற்கு தவறான கூட்டணி அமைத்தது மற்றும், பிரேமலதா, சுதீஷ் ஆகியோரின் தலையீடு அதிகமாக இருப்பதாக தேமுதிக நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.  

இதையடுத்து, கட்சியை விட்டு யாரும் செல்ல வேண்டாம். நான் இருக்கிறேன் என்று விஜயகாந்த் நிர்வாகிகளிடம் கூறினார். மேலும், கட்சி பணியிலிருந்து பிரேமலதா விலகி விட்டார் என்று கூறப்பட்டது.
 
இந்நிலையில், தேமுதிகவிலிருந்து விலகி திமுக கட்சியில் இணைந்த ஈரோடு தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் லோகநாதன், தென் சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் வேணு, கடலூர் கவுன்சிலர் மகாதேவன் ஆகியோர் தேமுதிக பொருளாளர் இளங்கோவன், நிர்வாகி பார்த்தசாரதி முன்னிலையில் இன்று தங்களை மீண்டும் தேமுதிகவில் இணைத்துக் கொண்டனர்.
 
தேமுதிகவிலிருந்து நிர்வாகிகளை இழுக்கும் பணியில் சந்திரகுமாரும், கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களை தக்க வைக்கும் முயற்சியில் விஜயகாந்தும் ஈடுபட்டுள்ளனர்.

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments