Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த கருத்துக்கணிப்பு பொய்யானது: குமுறும் வைகோ!

Webdunia
செவ்வாய், 3 மே 2016 (15:03 IST)
தினமலர், நியூஸ்7 தொலைக்காட்சி இணைந்து ஒரு கருத்துக்கணிப்பை இன்று வெளியிட்டது. இந்த கருத்துக்கணிப்பு குறித்து தேமுதிக-மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.


 
 
உளுந்தூர்பேட்டை தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட வைகோ, இந்த கருத்துக்கணிப்பு குறித்து விமர்சித்தார். இந்த கருத்துக்கணிப்பு திமுகவை வெற்றி பெற வைக்கும் சதி திட்டம் எனவும் இது பொய்யான கருத்துக்கணிப்பு எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
 
திமுகவினர்களை பார்த்து கேள்விகளை கேட்டு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளனர் என கூறிய வைகோ, பென்னாகரத்தில் போட்டியிடும் அன்புமணி 3-வது இடத்தை பிடிப்பார் என இந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளதை ஏற்க மறுத்தார்.
 
இது குறித்து கூறிய அவர், பாமக எங்கள் எதிரியாக இருந்தாலும், இந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது தவறானது. மக்கள் நல கூட்டணி தோல்வியை தழுவும் என கூறப்பட்டுள்ள இந்த கருத்துக்கணிப்பால் தொண்டர்கள் கலக்கமடைந்துள்ளனர். எங்களை சோர்வடைய செய்யும் சதி ஆகும். இதனை முறியடித்து எங்கள் அணி வெற்றி பெறும் என கூறினார் வைகோ.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து கூட்டு பாலியன் வன்கொடுமை: இன்ஸ்டா நண்பரால் விபரீதம்..!

ரூ.500 கோடியில் ஜெகன்மோகன் ரெட்டி ஆடம்பர பங்களா.. வீடியோ பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி..!

சித்திரையில் பிறந்தால் கெட்ட சகுனம்..? மூடநம்பிக்கையில் குழந்தையை கொன்ற தாத்தா!

நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துக்கள்; 2026ல் எங்களுக்கே வெற்றி: டிடிவி தினகரன் பேட்டி

பக்தர்கள் கவனத்திற்கு.! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கணுமா..! ஆன்லைனில் நாளை டிக்கெட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments