Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிமுக செய்ய வேண்டியது இதைத் தான்; ஸ்டாலின் கருத்து

Webdunia
சனி, 31 மார்ச் 2018 (08:57 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிமுக வின் எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்தால் தான் பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கொடுத்த 6 வார கெடு முடிவடைந்தது. ஆனாலும், மத்திய அரசு எந்த அறிவிப்பையும் அறிவிக்கவில்லை. இது தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், அதிமுக எம்.பி.க்கள் அனைவரும் தற்கொலை செய்துகொள்வோம் என்று நவநீத கிருஷ்ணன் பேசியதற்கும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒரே வழி அ.தி.மு.க.வின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும்  ராஜினாமா செய்வது தான். அவ்வாறு செய்தால் தி.மு.க.வின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய தயார். இப்படி நம் எதிர்ப்பை காட்டினால் தான், மோடி அரசு காவிரி மேலாண்மை வாரிய அமைக்க நடவடிக்கை எடுக்க முன்வரும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments